காங்கேயத்தில் கோடைகால கிரிக்கெட் சிறப்பு வகுப்பு நிறைவு

76பார்த்தது
காங்கேயம் கிரிக்கெட் அகாடமியின் இரண்டாம் ஆண்டு கோடைகால சிறப்பு வகுப்புகள் நேற்றுடன் 
நிறைவடைந்தது

 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த படியாண்டி பாளையத்தில் காங்கேயம் கிரிக்கெட் அகாடமியின் மைதானம் உள்ளது.  இந்த மைதானத்தில் ஆண்டுதோறும் கோடைகால சிறப்பு வகுப்புகள் 6 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் ஏப்ரல் 15 ஆம் தேதி துவங்கிய இந்த கோடைக்கால சிறப்பு வகுப்புகள் நேற்றுடன் நிறைவடைந்தது.  இந்த வகுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.   மேலும் இந்த மைதானத்தில் தினசரி வகுப்புகளும் நடைபெறும்.  நிறைவு விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிரிக்கெட் பயிற்சியாளர்கள் லட்சுமணன்,  மணி மற்றும் நவீன் பாலாஜி செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி