மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

52பார்த்தது
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
முத்தூர் அருகே உள்ள சக்கரபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் 2024 2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா தலைமை தாங்கினார். வெள்ளகோவில் வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் பேரணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அரசு பள்ளியின் முக்கியத்துவம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோசமிட்டு சென்றனர். பேரணி பள்ளியில் இருந்து புறப்பட்டு நத்தக்கடையூர் சாலை சக்கர பாளையம் பஸ் நிறுத்தம் வரை சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தது. இதில் பள்ளியின் ஆசிரியை சங்கீதா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் கோகிலாம்பாள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி