கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நீதி கோரி நாடு தழுவிய பந்த் வாபஸ் பெறப்படுவதாக ஐக்கிய மருத்துவ முன்னணி சங்கம் (யுடிஎஃப்ஏ) அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் உறுதியளித்தபடி, பந்த் வாபஸ் பெறப்படுகிறது. நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதில் அர்ப்பணிப்புடனும், நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையுடனும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக மத்திய பாதுகாப்புச் சட்டத்தை (சிபிஏ) அவசரமாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.