அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு, அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். "மானம் உள்ள யாரும், பிறரை அப்பா என, அழைக்க மாட்டார்கள் என நிதானம் இல்லாமல் அவர் உளறியிருக்கிறார். ஜெயலலிதா, சசிகலா, பழனிசாமி என காலத்திற்கு ஏற்றார் போல் போற்றி பாடுவதற்காகவே, தன் வாயை வாடகைக்கு விடுபவர்" என்று விமர்சித்துள்ளார்.