காங்கேயத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

54பார்த்தது
தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமை அரசு துவங்கி வைத்தது. போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோயை அறவே ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாடு முழுவதும் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நாளில் போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட்டது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பகுதியில் சுமார் 1154 மையங்களில் காலை 7: 00 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காங்கேயத்திலும் பல்வேறு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், தனியார் சொட்டு மருந்து முகாம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இம்முகாமிற்காக சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் பணி அமர்த்தப்பட்டு இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி