காங்கேயம்: கசிவுநீரை குடிநீர் மாற்றுவது குறித்து அமைச்சர் ஆய்வு

55பார்த்தது
காங்கேயம்: கசிவுநீரை குடிநீர் மாற்றுவது குறித்து அமைச்சர் ஆய்வு
காங்கேயம் வட்டாரத்தில் உள்ள கீரனூர் ஊராட்சி காமாட்சிபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 27.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் நீர் செறிவூட்டுவது, மறவபாளையம் ஊராட்சி செம்மங்குழிபாளையத்தில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ் ரூ.7.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை மற்றும் செம்மங்குழிபாளையத்தில் பவானி சாகர் பாசனப் பகுதியில் சேமிக்கப்படும் கசிவுநீரை குடிநீர் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அதிகாரிகளிடம், மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டு அறிந்தார். இந்த ஆய்வில் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி