BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக BSNL இன்டர்டெயின்மென்ட்(BiTV) என்கிற இணைய தொலைக்காட்சி சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களில் 450-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை இலவசமாக கண்டு ரசிக்க முடியும். இதற்காக BSNL, OTT Play நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த மாதம் புதுச்சேரியில் சோதனை முறையில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த BSNL திட்டமிட்டுள்ளது.