தூத்துக்குடி கந்த சஷ்டி திருவிழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்று (நவ., 05) பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தன. சுப்பிரமணிய சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பித்தளை சப்பரத்தில் சுப்பிரமணியர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.