அமெரிக்க அதிபர் தேர்தலில் 15 மாகாணங்களில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 7 மாகாணங்களில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் 177 எலக்டோரல் வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 99 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மொத்தம் 277 எலக்டோரல் வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும்.