குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சேலம் கிழக்கு கோட்டத்துக்குட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் வருகிற 30ஆம் தேதி வரை செல்வ மகள் மற்றும் பொன் மகன் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம் நடக்கிறது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு பொன்னான எதிர்காலத்தை உருவாக்கிட இந்த சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.