காங்கேயம் பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

69பார்த்தது
காங்கேயம் நகராட்சி 18 வார்டு பகுதியில் உள்ளடக்கியது. இதில் திருப்பூர் ரோடு, சென்னிமலை சாலை, காங்கேயம் பிரதான சாலை, பழைய கோட்டை ரோடு ஆகியவற்றை இணைக்கும் இடமாக காங்கேயம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காங்கேயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு மிக முக்கிய தொழில் நகரங்களுக்கும் பயணிகள் வந்து செல்கின்றனர். தினசரி அளவில் சுமார் 5, 000 முதல் 10 ஆயிரம் வரை பயணிகள் வந்து செல்லும் மிக முக்கிய பேருந்து நிலையமாக விளங்குகிறது. இங்கு பயணிகள் காத்திருக்கும் நடைமேடைகள் மற்றும் வணிக வளாக கடைகள் முன்பு  30க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிகிறது. இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மேலும் பேருந்து பயணிகள் காத்திருக்கும் போது அவ்வப்போது நாய்கள் சிறுமிகள், பெண்கள், பயணிகளை துரத்துவதும் , கடிப்பதும் போன்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே உடனடியாக இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காங்கேயம் நகராட்சி அதிகாரிகள் இங்குள்ள தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி