மைலாப்பூர் சென்று சுண்டைக்காய் விலை கீரை விலை கேட்டால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது- முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கடும் தாக்கு.

1423பார்த்தது
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே  குட்டப்பாளைத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட காங்கிரசின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று வருகை தந்தார். அவரை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் பொன்னாடை வழங்கி சிறப்பித்தனர்.

காங்கேயம் அருகே குட்பாளையத்தில் உள்ள சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்திற்க்கு முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப. சிதம்பரம் வருகைபுரிந்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து ஆராய்ச்சி மையம், அதன் பணிகள் மற்றும் காங்கேயம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ள கொரங்காடுகள் குறித்தும், காங்கயம் கால்நடைகளின் சிறப்பு , இன பெருக்கம் குறித்தும் ப. சிதம்பரம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் இனப் பெருக்க காளையான பூச்சிக் காளையை  பார்த்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கு பால் உற்பத்தியை பெருகுவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தரம் வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பாரம்பரிய இனங்களை பாதுகாக்கும் முயற்சிகளை பாரம்பரிய மாடுகள் மட்டுமின்றி மரங்கள் காய்கறி வகைகள் இவற்றை ஊக்கப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தான் எல்லாம் யோசனைகள் வருகிறது என்ற அந்த எண்ணமே தவறு. நமது பாரம்பரியமான எண்ணங்களை எல்லாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் என்றார். தொடர்ந்து பொருளாதாரம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு  பொருளாதாரம் அது எனக்கு தெரியாது என நகைச்சுவையாக தெரிவித்தார். அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு மைய வங்கி  வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றது, இந்தியாவில் வட்டி விகிதத்தை குறைவாக உயர்த்துவதால் நூறு பில்லியன் டாலர் அன்னிய செலாவணியை ரிசர்வ் வங்கி விற்று உள்ளதே என்ற கேள்விக்கு, , , இது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நான்கு விதங்களில்  பாதிப்பை ஏற்படுத்தும் வளர்ச்சி குறையும் , ஜிடிபி 6. 5 க்கு வராது. இந்தியாவின் வளர்ச்சி 6. 5 என உலக வங்கி கூறிய பிறகு அதை  அரை மனதோடு மத்திய அரசு அதை ஏற்றுக் கொள்கிறது. 6. 5 வருவதும் ரொம்ப கடினம். வளர்ச்சி குறைந்து விலைவாசி உயரும். அதை ரிசர்வ் வங்கி கவர்னரும் ஒப்புக்கொள்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாகிறது. கடந்த ஆறு மாதத்தில் தங்க இறக்குமதி மட்டும் ரூ. 2000 கோடி டாலர் அதாவது 160 ஆயிரம் கோடி ரூபாய் நடப்புக் கணக்கு பற்றாக்குறை விரியும். கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான எதிர்காலம் என்று சொல்ல முடியாது. இதில் தான் அரசு மத்திய அரசு சமயோசிதமாக, புத்திசாலித்தனமாக கலந்தாலோசிப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். சென்னை மயிலாப்பூரில் சென்று சுண்டைக்காய் விலை என்ன, , ,?? கீரை விலை விலை என்ன, , ,?? என்று கேட்டால் மட்டும் இதற்கெல்லாம் தீர்வாகாது. (நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறி மார்க்கெட் சென்றதற்கு பதிலடியாக இவ்வாறு தெரிவித்துள்ளார்).

ஜப்பான் நாட்டுடன் செய்து ஒப்பந்தப்படி டாலருக்கு நிகராக நமது ரூபாயை நிலையாக வைத்துக் கொள்ள ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. டாலரை கையிருப்பில் சீராக வைத்துக் கொள்ள ஸ்வாப் செய்யும் அளவுக்கு செல்ல வேண்டியது இல்லை. தற்போது கூட ரிசர்வ் வங்கியில் 500 பில்லியன் டாலர் அளவிற்கு கையிருப்பு உள்ளது. ஆனால் கரன்சி ஸ்வாப் அளவுக்கு நாம் தள்ளப்பட மாட்டோம் என நம்புவதாக தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்த கேள்விக்கு , , , , கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபக் ப்ளஸ் நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியன கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதால் விலை உயரலாம். ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் உயராவிட்டாலும் நமது நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும், பணவீக்க விகிதமும், ரூபாயின் மதிப்பு சரிவதும், நமது நாட்டின் பணவீக்க விகிதத்தை அதிகப்படுத்தும். பாரத் ஜோடோ யாத்திரை குறித்த கேள்விக்கு, , , , இது ஒரு வெற்றிப் பயணம். அவரவர் வீடுகளில் முடங்கி கிடந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அபிமானிகளை வீட்டை விட்டு வெளியில் வர வைத்துள்ளது. சாதாரண மக்கள் ஜோடோ யாத்திரை நடைபெறும் வழியெங்கும் இரு பக்கமும் நின்று வரவேற்கிறார்கள். மலர் தூவுகிறார்கள் இதிலிருந்து கன்னியாகுமரியில் இருந்து புதிய ஆர்வம் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இன்னும் 130 நாட்கள் உள்ள நிலையில் இந்த யாத்திரை மேலும் மேலும் பலம் கூடும், என ப. சிதம்பரம் தெரிவித்தார். பின்னர் புறப்பட்டு கோவை சென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி