ஐபிஎல்-ல் இந்த சீசனுக்கான லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். லக்னோ அணியின் பயிற்சி முகாமில் ஜாகீர் இணைய வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு ரசிகை ஒருவர் கையில் 'ஜாகீர் ஐ லவ் யூ' என்ற பதாகையை ஏந்திய படி ஜாகீர்கானுக்கு ப்ரப்போஸ் செய்தார். இதே ரசிகை கடந்த 2005-ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியின்போது இதே போல் பதாகையை ஏந்தி ஜாகீர் கானுக்கு ப்ரப்போஸ் செய்தார்.