நடிகை ரன்யா ராவின் தந்தைக்கு கட்டாய விடுப்பு

74பார்த்தது
நடிகை ரன்யா ராவின் தந்தைக்கு கட்டாய விடுப்பு
தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையை டிஜிபி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கர்நாடக காவல்துறை வீட்டு வசதி வாரிய டிஜிபி ராமச்சந்திர ராவை பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க கடத்தல் வழக்கை கர்நாடக அரசின் சிறப்பு குழுவும் விசாரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி