காங்கேயம் வெள்ளகோவில் ஆர்ப்பாட்டம் இந்து முன்னணியினர் கைது

74பார்த்தது
தமிழகத்தில் கோவில் நிலங்களில் வரும் வருவாய் முழுமையாக கோயில்களுக்கு சென்றடைவதில்லை என்று குற்றம் சாட்டியும் கோவில் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் காங்கேயம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். நகர பொதுச்செயலாளர் கௌரிசங்கர் ஒன்றிய பொதுச்செயலாளர் நாகராஜ், செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை இதை அடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 50 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காங்கேயம் பேருந்து நிலையத்தில் ஒரு மணி வரை பரபரப்பு நிலவியது. இதேபோல் வெள்ளகோவில் காங்கேயம் சாலை பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜஸ்தலம் நிர்வாகிகள் சண்முகசுந்தரம் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் வைத்தார் ஆர்ப்பாட்டத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டு மூலனூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி