சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று காலை முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனிடையே டி.நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் மின் வயர் ஒன்று அறுந்து மழை வெள்ளத்தில் விழுந்தது. அப்போது அந்த மின் வயர் பட்டாசு போல் வெடித்துச் சிதறியது. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகிவருகிறது.