காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் மாயவன். காங்கேயம் உட்கோட்டத்தில் காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், ஒரு மகளிர் காவல் நிலையம் மற்றும் ஒரு போக்குவரத்து காவல் நிலையம் என 6 காவல் நிலையங்களும் அதில் இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் என 250க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் ஆயில் பணி காவலராக பணிபுரிந்து வருபவர்கள் சிலர் நிரந்தரமாக பல வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். காங்கேயத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாயவன் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அவருடைய மேற்பார்வைக்கு கீழ்வரும் காங்கேயம் உட்கோட்டத்தில் உள்ள 6 காவல் நிலையங்களுக்கும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் கடந்த பல மாதங்களாக காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களும் வாகன சோதனையில் பிடிக்கும் வாகன உரிமையாளர்களை மரியாதை குறைவாக நடத்துவதாக பல புகார்கள் வருகின்றன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் தன்னிடம் புகார் மனு கொடுத்த காரணத்தினாலும் அயல் பணியாக பணிபுரியும் காவலர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.