ரேஷனில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு? - ராமதாஸ் கேள்வி

63பார்த்தது
ரேஷனில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு? - ராமதாஸ் கேள்வி
சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக்கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், வெளிச்சந்தையில் பருப்பு விலை உயருவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு நியாயவிலைக்கடைகளில் பருப்பு வழங்கலை தாமதப்படுத்துகிறதா? என்பது தெரியவில்லை. ஏழை-நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி