டென்னிஸ் அரையிறுதி.. சபலென்கா, கோகோ காஃப் இன்று மோதல்

76பார்த்தது
டென்னிஸ் அரையிறுதி.. சபலென்கா, கோகோ காஃப் இன்று மோதல்
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று (அக்.11) நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, போலந்து வீராங்கனை மேக்டலெனா உடன் மோதினார். அதில் சபலென்கா வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காஃப், போலந்தின் மேக்டா லினெட் உடன் மோதினார். இதில் கோகோ அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று (அக்.12) நடைபெறும் அரையிறுதியில் கோகோ காஃப், சபலென்காவை எதிர்கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி