தாராபுரத்தில் உலக சித்தர்கள் மாநாடு இன்று தொடக்கம்!

63பார்த்தது
தாராபுரத்தில் உலக சித்தர்கள் மாநாடு இன்று தொடக்கம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உலக சித்தர்கள் ஞான பீடம் நடத்தும் ஐந்தாவது உலக சித்தர்கள் மாநாடு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தர உள்ளனர். மேலும் 5 லட்சம் ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட வரும் சிவலிங்கத்திற்கு பூஜை நடைபெற்றது. மேலும் இந்த மாநாட்டில் ஏராளமான சித்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர் மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் சித்த மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி