தாராபுரம்: நெஞ்சுவலி மயங்கி விழுந்த நபரை காப்பாற்றிய காவலர்!

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் ஒருவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி சாலையில் விழுந்தார். அப்போது தாராபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் கோபால் என்ற காவலர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

பேருந்துக்காக காத்திருந்த நபர் திடீரென மயங்கி கீழே விழுந்தை பார்த்த காவலர் கோபால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி உள்ளார் என்பதை உணர்ந்தவுடன் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றினர். சரியான நேரத்தில் காவலர் கோபால் முதலுதவி சிகிச்சை அளித்ததே மயங்கி விழுந்த பழனி என்ற நபர் காப்பாற்றப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். காவலர் முதலுதவி செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காவலருக்கு பாராட்டு தெரிவித்து காவலர் மருத்துவர் உதவி வீடியோ வைரலாக பரப்பி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி