தாராபுரம்: பறவைக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

556பார்த்தது
தாராபுரம்: பறவைக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பண்ணைக்கோழிகளிலிருந்து பரவி வரும் பறவை காய்ச்சலை தடுக்கவும், கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்து நோய் தொற்றை தடுக்க வேண்டுமென தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர் அந்த மனதில் கூறியுள்ளதாவது: -


கேரளாவில் பரவிய பறவை காய்ச்சல் தற்போது தமிழகத்திலும் கோழி பண்ணைகளில் இருந்து பரவி வருகிறது. இந்நிலையில் அதிக அளவு வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோழி இறைச்சிகளை சாப்பிடுவதால் உடலில் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் தாராபுரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள குண்டடம், மூலனூர், அலங்கியம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 500, க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளிலிருந்து அதிக அளவில் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாலும், கோழி இறைச்சிகளை மக்கள் சாப்பிடும்போது பொது மக்களுக்கு அதிகளவு பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே கோட்டாட்சியர் செந்தில் அரசன் அவர்கள் தாராபுரம் சுற்று வட்டார பகுதியில் இருக்கின்ற கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்து நோய் தோற்று இருக்கும் பண்ணைகளில் கோழிகளை உடனடியாக அப்புறபடுத்தி நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி