வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வரும் அக். 17-ல் புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த சில மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 440 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 460 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும், நெல்லூருக்கு 530 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது.