தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் ஜூலை 2 எழுச்சி நாளில் எழுச்சி கொள்வோம் என தமிழக முதலமைச்சர் திமுக' தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கேட்டு தாராபுரம் வட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு நின்று வட்டக்கிளை தலைவர் செந்தில்குமார், தலைமையில் வட்டக்கிளை செயலாளர் தில்லையப்பன், முன்னிலையில் நடைபெற்றது.


இதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 21 மாத கால ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்கிட வலியுறுத்தியும், சாலை பணியாளர்களின் 41, மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசு துறையிகளில் உள்ள காலிப் பணியிடங்களை அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் 25%சதம் வழங்கப்பட்டு வந்ததை 5%மாக குறைத்ததை திரும்ப பெற வேண்டும். சத்துணவு திட்டத்தில் பணியாற்றி இறந்தோரின் ஆண் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிப்பளுவை குறைத்திட வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களை கொண்டு சத்துணவு மையங்களில் மூலம் அமல்படுத்த வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 50, க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி