தாராபுரம் இந்து முன்னேற்ற கழகம் அலுவலகம் மற்றும் தளவாய் பட்டிணம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 3 விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். புது காவல் நிலைய வீதி. தாலுகா அலுவலக சாலை. ஐந்து இணைப்பு சாலை. என அமராவதி ஈஸ்வரன் கோயில் ஆற்றுப்பாலம் வரை ஊர்வலமாக வந்தனர். அதன் பிறகு அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யப்பட்டன பின்னர்
தாராபுரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அமைப்பின் தலைவர் வக்கீல் கே. கோபிநாத் பேசினார். அதில்
இந்து பண்பாட்டை காக்க இந்து முன்னேற்ற கழகம் போராடும் என்றும் இந்துக்களுக்கு என்று இருக்கும் ஒரே நாடு இந்தியா தான். இங்கு மதத்தை வைத்து சிலர் பிழைப்பு நடத்துகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இந்துக்கள் சிலை வைக்கக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது. அதற்கு இந்து அமைப்புகளே தடையாக இருப்பது தான் வேதனையானது. நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை விரட்ட விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்துக்கள் ஒற்றுமையுடன் எழுச்சி விழாவாக கொண்டாடவே விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இந்து மதத்தை இழிவுபடுத்தினால் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம். இந்து மதத்துக்கும், இந்து உணர்வுக்கும், இந்து பெண்களுக்கும், இந்து பண்பாடு, கலாசாரத்தை காக்க இந்து முன்னேற்ற கழகம் போராடும். இளைஞர்கள் இந்து பண்பாட்டை காக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.