மூலனூரில் 1. 15 கோடிக்கு பருத்தி ஏலம்

75பார்த்தது
மூலனூரில் 1. 15 கோடிக்கு பருத்தி ஏலம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 492 பேர் பருத்தி விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தி அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு 8, 393 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 1. 15 கோடி ஆகும்.

தொடர்புடைய செய்தி