இருசக்கர வாகனத்தில் வந்தவர் மாடு மீது மோதி உயிர் இழப்பு

64பார்த்தது
திருப்பூர்தேசிய நெடுஞ்சாலையில் மாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.


திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த ஆட்டையம்பாளையம் பகுதியில் கடந்த ஒன்பதாம் தேதி இரவு அன்னூரைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் அப்போது மாடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றது இரவு நேரத்தில் மாடு கண்ணுக்கு தெரியாத நிலையில் குணசேகரன் சென்ற இருசக்கர வாகனம் மாட்டின் மீது மோதி கீழே விழுந்தார் இதில் குணசேகரன் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மாடுகளை சாலையில் மேய விடுவதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதாகவும் மாடுகளை தனியாக சாலையில் விடாமல் கண்காணிக்க வேண்டும் எனவும் அத்தகைய மாடுகளை உரிமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி