திருமுருகன் மெட்ரிக் பள்ளி மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை

571பார்த்தது
திருமுருகன் மெட்ரிக் பள்ளி மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை
தேசிய அளவிலான 67-வது பள்ளி மாணவ- மாணவிகளுக் கான செஸ் போட்டி ஸ்கூல் கேம்ஸ் பெடரேசன் ஆப் இந் தியா சார்பில் கடந்த 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட னர். 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் திருப்பூர் நெருப் பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவன் எஸ். கோகுலகிருஷ்ணா வெற்றி பெற்று தங்கப்பதக் கம் வென்றார்.
ஏற்கனவே இந்த மாணவன் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து தேசிய அள விலான போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், தற்போது தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக் கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கும், திருப்பூருக்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த மாணவன் கோகுல கிருஷ்ணா வுக்கு திருமுருகன் மெட்ரிக் பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி நிறுவனர் டாக்டர் ஜி. மோகன், பள்ளி தாளாளரும், முதல்வருமான சுதா மோகன் ஆகியோர் மாண வனுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்கள். பள்ளி ஒருங்கி ணைப்பாளர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி