துப்பாக்கியுடன் போலீசார் இரவு ரோந்து. எஸ்பி அதிரடி உத்தரவு

81பார்த்தது
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதை தடுக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் அனைவரும் கைதுப்பாக்கியுடன் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடந்த 28ம் தேதி அன்று அடுத்து 4 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதில் ஈடுபட்ட நபர்கள் கடப்பாரை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதே போல் நேற்று முன்தினம் இரவு காங்கேயம் பகுதியில் அடுத்தடுத்து 6 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது போன்ற தொடர் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இரவு ரோந்து பணியை மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தவும், காவலர்களை அதிகரித்து அனைத்து காவலர்களிடமும் கைத்துப்பாக்கி வழங்க காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, வெள்ளகோவில், மடத்துக்குளம் என 24 காவல் நிலையங்களில் பணியாற்றும் 300 காவலர்கள் கை துப்பாக்கியுடன் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதுடன் வாகன சோதனையும் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி