சிவன்மலை அருகே ஜே. ஜே நகரில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்திற்கு எதிராக எச்சரிக்கை பதாதைகள்
காங்கேயம் அடுத்த சிவன்மலை அருகே கரட்டுப்பாளையம், ஜே. ஜே. நகர் மற்றும் நல்லிபாளையம் பகுதியில் தனியார் நிறுவனம் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையை நிறுவி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இறைச்சிகளை வெட்டி சுத்தம் செய்து அதை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுமான பணியை அந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற சிவன்மலை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெ ஜெ நகர் பொதுமக்கள் சிவன்மலை ஊராட்சித் தலைவர் துரைசாமி, துணைத்தலைவர் சண்முகம், மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலரிடம் இந்த நிறுவனத்திற்கு எதிராக மனு அளித்ததை அடுத்து கிராம சபை கூட்டத்தில் இந்த தொழிற்சாலைக்கு ஒப்புதல் வழங்கப்பட மாட்டாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி முதல் ஊர் பொதுமக்கள் சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஊருக்குள் ஆங்காங்கே பதாதைகளை வைத்து அந்த தனியார் நிறுவனத்திற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.