ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலைப்பாட்டில் உடன்பாடில்லை ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வோம் என திருமாவளவன் திருப்பூரில் பேட்டி.
சாலை விபத்தில் மரணம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் நிர்வாகி காளியாதேவி குடும்பத்தினரை திருப்பூர் பொங்கு பாளையம் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து பின்னர் 70 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலைப்பாட்டில் தங்களுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை எனவும் முன்னரே இந்த முறைக்கு தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் மேலும் ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி எதிர்ப்பு குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய முயற்சி செய்வோம் என தெரிவித்தார்.