பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது.

71பார்த்தது
திருப்பூர் பங்களா ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் அவினாசியில் உள்ள தனது நிலத்தை பிரித்து பத்திரப்பதிவு செய்ய சேவூர் நில அளவையர் காளியப்பனிடம் விண்ணப்பித்துள்ளார். நிலத்தை சப் டிவிஷன் செய்ய பத்தாயிரம் ரூபாயை சர்வேயர் காளியப்பன் கேட்டதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து மணிகண்டன் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை இன்று சேவூர் அலுவலகத்தில் இருந்து காளியப்பன் இடம் நேரில் சென்று கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் காளியப்பனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். நிலத்தை சப் டிவிஷன் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேவூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி