9-ந் தேதி முழு கடையடைப்பு நடத்த முடிவு

1181பார்த்தது
9-ந் தேதி முழு கடையடைப்பு நடத்த முடிவு
அவினாசியில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்
9-ந் தேதி முழு கடையடைப்பு நடத்த முடிவு

அவினாசியில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 9-ந் தேதி முழு கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்பு
அவினாசி நகர் புறத்தில் பெருகிவரும் சாலையோர கடைகளால் பெரும் விபத்துகளும் உயிரிழப்புகளும் அன்றாடம் நடைபெறுகிறது. சிலர் கடைகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பல இன்னல்கள் ஏற்படுகிறது.
எனவே சாலையோர கடைகளை முறைப்படுத்த வேண்டும் என்று பல கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்க ளுக்கு வைக்கப்பட்டது.
இதன் பொருட்டு அவினாசி பேரூராட்சி மன்றம், சாலையோர கடைகளை முறைப்படுத்துவது தொடர்பாக தீர்மானம் நிறை வேற்றியது. இதை கடந்த 1. 10. 2023 அன்று செயல்படுத்துவ தாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவிதமான காரணமும் இன்றி சாலையோர கடைகளை முறைப்படுத்துவது செயல்படுத்தப்படவில்லை. இதனால் அவினாசி பேரூராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்த கோரி அவினாசி அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பாக வருகிற 9-ந் தேதி அன்று ஒரு நாள் அடையாள முழு கடையடைப்பு நடை பெறும் என்றும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக் குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அவினாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து துண்டு பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி