அவினாசி ஒன்றியம்குப்பண்டம்பாளையம் ஊராட்சி ஏ. டி. காலனி பகுதியில் 70 குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மயானத்திற்குசரியான வழித்தடம் இல்லை என்று பெண்கள் உள் ளிட்ட அப்பகுதி மக்கள் குப்பாண்டம்பாளை யம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் "எங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு செல்ல சரியான வழித்தடம் இல்லை. அங்கு புதர்கள் மண்டி இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து ஏற்கனவே ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் முறையிட்டும் வழித்தடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அது ஓடை புறம்போக்காக இருப்பதால் அங்கு வழித்தடம் அமைக்க முடி யாது என்று ஒதுக்கப்பட்ட நிதியும் திருப்பி அனுப்பப்பட்டது. இப்போது நாங்கள் மயான த்திற்கு செல்ல வழி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின் றோம்.
எனவே எங்களுக்கு மயானம் செல்ல வழித்த டம் அமைக்க வேண்டும் அல்லது வேறு இடத்தில் மயானம் ஒதுக்கித் தர வேண்டும் என்றனர்.