திருப்பூர், பெருமாநல்லூரில் அழகு வள்ளி கும்மி கலைக்குழு சாதனை கும்மியாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பாஜக தமிழிசை வள்ளி கும்மி ஆடி மகிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த பெருமாநல்லூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காமராஜர் கலாம் அறக்கட்டளை சார்பில் சாதனை நிகழ்ச்சிக்காக அழகு வள்ளி கும்மி கலைக்குழுவின் கும்மியாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் கும்மியாட்டக் கலைக்குழுவுடன் இணைந்து அவர் சிறிது நேரம் வள்ளி கும்மி நடனமாடி மகிழ்ந்தார். மேலும் 7 மணி நேரம் 7 நிமிடம் 7 நொடிகள் மற்றும் 333 கலைஞர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து நடனமாடும் நிகழ்ச்சியை நிகழ்ச்சி நேர கடிகாரத்தை பொத்தானை அமுக்கி ஆரம்பித்து வைத்தார். ஒரு குழந்தைக்கு காலில் சலங்கை கட்டி விட்ட சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கி கவுரம் செய்தார்.