இந்தியாவிலேயே முதன்முறையாக புதிய சேவை

77பார்த்தது
.

திருப்பூர் மாவட்டம் பூண்டி தனியார் ஹோட்டலில். பிளைட் கனெக்ட். நிறுவனத்தின் திருப்பூர் முதல் கோவை விமான நிலையம் வரை செல்லக்கூடிய குளிர்சாதன பெட்டியுடன் கூடிய 2 வேன் அறிமுக விழா நடைபெற்றது. திருப்பூர் எக்ஸ்போர்ட் அசோசியேஷன் முன்னாள் தலைவர் பப்பீஸ் சக்திவேல். , TEA தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பிளைட் கனெக்ட் நிறுவனர் பிரசாந்த் பேசிய போது. இந்தியாவில் முதல் முறையாக 599 ரூபாயில் குளிர்சாதன பெட்டி வசதியுடன் திருப்பூர் மாவட்டத்தில் பழைய புதிய பேருந்து நிலையம். புஷ்பா தியேட்டர். காந்திநகர். பப்பிஸ் விஸ்டா ஹோட்டல் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிகள் பயணிக்கலாம். மேலும் திருப்பூரில் எக்ஸ்போர்ட் ஏற்றுமதியாளர்கள் வசதிக்காகவும் இது துவங்கப்பட்டுள்ளதாகவும் தினமும் திருப்பூரில் இருந்து எட்டு பயணமும் கோவையில் இருந்து திருப்பூருக்கு எட்டு பயணமாக திட்டமிட்டுள்ளதாகவும் அதிக நேரம் டிராவலிங் செய்து வரும் பயணிகளுக்கு டவல் , வாட்டர் பாட்டில் , நியூஸ் பேப்பர் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அதிக வரவேற்பு தரவேண்டியும் மென்மேலும் அதிக அளவில் வேன்கள் பயன்பாட்டுக்கு தரவுள்ளதாகவும் இதில் ஜி. பி. எஸ். வசதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி