முசிறியின் மூன்று பள்ளிகள் 100% தேர்ச்சி

69பார்த்தது
முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் பிளஸ் டூ பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

லால்குடி கல்வி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வில் முசிறி அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 84 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும். தொடர்ந்து ஆறு வருடங்களாக 100% தேர்ச்சி பெற்று வருகின்றனர். இப்பள்ளி மாணவன் எம் ஜி பரணிதரன் 600 க்கு 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், மாணவி என் நிலா 579 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவன் கே ராமானுஜன் 578 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் கணித பாடத்தில் ஐந்து பேரும், கணினி அறிவியல் மற்றும் கணக்குப்பதிவியல் படங்களில் தலா மூன்று பேரும், வணிகவியல் பாடத்தில் இரண்டு பேரும், பொருளியல் பாடத்தில் ஒரு நபரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் பதினோரு மாணவ மாணவிகள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 100% தேர்ச்சி பெற பாடுபட்ட ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மற்றும் மாணவ மாணவிகளுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் அருட் சகோதரி ரோஸி வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி