ரஷ்ய சர்வரில் இருந்து வந்த வெடிகுண்டு மிரட்டல்

51பார்த்தது
ரஷ்ய சர்வரில் இருந்து வந்த வெடிகுண்டு மிரட்டல்
குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீசாரும், வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் கூறுகையில், “ரஷ்ய சர்வரில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்துள்ளது. விசாரணை நடத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி