'ஆசிட்’ குடித்து கல்லூரி பேராசிரியை கணவர் தற்கொலை

4008பார்த்தது
'ஆசிட்’ குடித்து கல்லூரி பேராசிரியை கணவர் தற்கொலை
திருச்சி உறையூர் கங்கா அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 58). இவரது மனைவி வள்ளி ( 47). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். டிரைவராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வழக்கம்போல் குடிபோதையில் அவர் வீடு திரும்பினார். பின்னர் மனைவியிடம் அவர் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் திடீரென குளியலறையில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேராசிரியை வள்ளி அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி