அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு கூறிய கருத்துக்கு நடிகை த்ரிஷா பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். அவரது X பதிவில், கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசும் நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது. இச்செயலுக்கு உறுதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பேன் என பதிவிட்டுள்ளார். கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தபோது அங்கு த்ரிஷா பணம் கொடுத்து அழைத்துவரப்பட்டார் என அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியிருந்தார்.