துப்புரவு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை

79பார்த்தது
துப்புரவு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சியில் பரிதாபம்


திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் மணி (வயது 40) இவருக்கு திருமணம் ஆகி கன்னியம்மாள் என்ற மனைவி உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாரி சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்க மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து கன்னியம்மாள் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி