கோவையிலிருந்து ஞாயிறு இரவு புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி வந்தது. கோவையைச் சேர்ந்த முருகபூபதி (36) என்பவர் பேருந்தை ஓட்டிவந்தார். திங்கள்கிழமை அதிகாலை விருதுநகர்- சாத்தூர் நான்குவழிச் சாலையில் வச்சக்காரப்பட்டி அருகே சென்றபோது, சாலையோரத்தில் உள்ள சிறிய பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் பேருந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சையிலிருந்த புவனேஸ்வரி சற்று நேரத்தில் உயிரிழந்தார். காயமடைந்த பேருந்து ஓட்டுநர் முருகபூபதி உள்ளிட்ட 37 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.