துறையூர் அருகே சாலையை கடக்கும் மலை பாம்பு வீடியோ

60பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சாலையை கடந்த மலைப் பாம்பு வைரலாகும் வீடியோ.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பொழிந்து வருகிறது அந்த வகையில் நேற்று முன்தினம் துறையூர் அதைச் சுற்றியுள்ள நாகலாபுரம் பெருமாள் மலை அடிவாரம் கீரம்பூர் காளிப்பட்டி சொரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பொழிந்தது நேற்று முன்தினம் நாகலாபுரம் அருகே இரவில் மழை பெய்த போது சாலையை பெரிய மலைப்பாம்பு ஒன்று கடந்து சென்றுள்ளது அதை அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர் அந்த வீடியோ தற்போது துறையூர் பகுதியில் வைரலாகி வருகிறது. சாலையை கடக்கும் வீடியோ துறையூர் பகுதியில் தற்போது வைரலாகி வருவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி