திருச்சி எஸ். ஆர். எம். யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
திருச்சி எஸ். ஆர். எம். யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ரயில்வே தனியார் மையத்தை உடனடியாக நிறுத்திட வேண்டும், அவுட்சோர்சிங் ஆட்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும், லட்சக்கணக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 8-வது சி.பி.சி அறிக்கைக்காக காத்திராமல் 50 சதவீத டி.ஏ.வை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன் இணைத்துவிட வேண்டும், 

என்.பி.எஸ்; யூ.பி.எஸ்.ஐ ரத்து செய்ய வேண்டும், மீண்டும் ஓ.பி.எஸ் வழங்கிட வேண்டும், 01-01-2023 முதல் அனைத்து கேட்டகிரிகளுக்கும் சி.ஆர்.சி பதவி உயர்வு வழங்கிட வேண்டும், ஐ.ஆர்.டி பதிவு செய்தவருக்கு இடமாற்ற உத்தரவு வழங்கிட வேண்டும், 4 பன்ச் பயோமெட்ரிக் என்ற பெயரால் ஒர்க்ஷாப் தொழிலாளர்களை துன்புறுத்தக் கூடாது, பயோமெட்ரிக்கை அனைத்து தொழிலாளர்களுக்கும் கொண்டுவரும் முடிவை கைவிட வேண்டும், அனைத்து கேட்டகிரிகளுக்கும் எட்டு மணி நேர வேலையை உறுதி செய்திட வேண்டும், லோகோ பைலட், 

கார்டுகளின் வேலை நேரத்தை குறைத்து வாரம் ஒரு முறை முழுநாள் ஓய்வினை கட்டாயம் ஆக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தும் விதமாக எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் திருச்சி பொன்மலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி