தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி, சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி அவரது எக்ஸ் பதிவில், மகளிர் அனைவரும் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஒளிர இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன். மார்ச் 8 மகளிர் தினமாக இருப்பதை விட ஒவ்வொரு தினமும் மகளிருக்கான தினமாக இருக்க வேண்டும் என்பதே இன்று அனைவரும் விரும்புவது என கூறியுள்ளார்.