திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வைரிச்செட்டிப்பாளையத்தில் சுவாமி விவேகானந்தா வித்யாலயா மேல் நிலைப் பள்ளிக்கு வருகை தந்த துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் பள்ளியில் உள்ள விவேகானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்பு பள்ளியின் பின்புறத்தில் சட்டமன்ற உறுப்பினர் மரம் நட்டு வைத்தார். அதனை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர், சட்டமன்ற உறுப்பினருக்கு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட கட்சி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
இவ்விழாவில் துறையூர் சட்ட மன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர், பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்