துறையூர் மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா

51பார்த்தது
துறையூர் 17வது வார்டு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் ஒரு பகுதியான இன்று பால்குட திருவிழா நடைபெற்றது இந்த பால்குட திருவிழாவானது துறையூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி பெரிய கடை வீதி சிலோன்ஆபீஸ் வழியாக 17வது வார்டு மாரியம்மன் கோவில் வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் அழகு குத்திக் கொண்டும் பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக சென்றனர்.

தொடர்புடைய செய்தி