துறையூர்: நெல் களம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

81பார்த்தது
துறையூர்: நெல் களம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளியாம்பட்டி கிராமத்தில் நேற்று (நவம்பர் 18) புதிய நெல் களம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் அவர்களது பதினைந்தாவது நிதி குழு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படும் இந்த நெல் களம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், ஒன்றிய சேர்மேன் சரண்யாமோகன்தாஸ், ஆதி திராவிடர் நலக்குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி