திருச்சியில் சாதனை புரிந்த 35 மகளிர்களுக்கு விருது

78பார்த்தது
திருச்சியில் சாதனை புரிந்த 35 மகளிர்களுக்கு விருது
திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 35 மகளிர்களுக்கு சாதனை பெண்கள் விருது வழங்கப்பட்டது. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரியின் சமூக பணித்துறை இணைந்து பல்வேறு துறையில் சாதித்த மகளிர்களுக்கு நேற்று திங்கட்கிழமை திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனைப் பெண்கள் விருது வழங்கப்பட்டது. 

ஆண்டுதோறும் ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக பல்வேறு துறையில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் இசபெல்லா ராஜகுமாரி, ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுதா பிரபு, ஹோலி கிராஸ் கல்லூரி சமூக நலத்துறை தலைவி அனிதா ஆகியோரின் சிறப்பான ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் டாக்டர் உமா வைத்தியநாதன், அருட் சகோதரி ஜோசப்பின் சின்னராணி, சாக்சீடு இயக்குனர் பரிமளா சேவியர், தில்லைநகர் குற்ற பிரிவ இன்ஸ்பெக்டர் அஜீம், காவல்துறை கன்டோன்மென்ட் உதவி ஆணையர் யாஸ்மின், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அமுதா, தொழில் முனைவர் சங்கீதா, வழக்கறிஞர் ஹனிஃபா பீ உள்ளிட்ட 35 மகளிர்களுக்கு சாதனை பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

தொடர்புடைய செய்தி