திருச்சி மாவட்டம் மணப்பாறை இரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த மணப்பாறை இரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் இளைஞர் மணப்பாறை கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த பரக்கத்துல்லா மகன் அசாருதீன்(25). இவர் மளிகைக் கடையில் வேலை செய்து வந்தார் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து திங்கள்கிழமை மாலை உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.